முத்தொள்ளாயிரம் போற்றும் முத்தரையர்:

முத்தொள்ளாயிரம் போற்றும் முத்தரையர்:



கரிகால் சோழனின் முன்னோர்களாகக் கருதப்படும் நந்திவர்மன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தும்கூர் பகுதியில் எரிகல் நாட்டினை ஆண்டவர் (கி.பி.5 ஆம் நூற்றாண்டு ஆவார். அவரது மூன்று மகன்கள் சிம்மவிஷ்ணு, சுந்தரானந்தா மற்றும் தனஞ்ஜெயன் ஆகியோர் ஆவர். இம்மூன்று சகோதரர்களும் சம காலத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆண்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் இளையவரான எரிகல் முத்தரையர் என்கிற தனஞ்செய முத்திரியர் ரேநாட்டினை ஆண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தனஞ்செய முத்திரியர் தோற்றுவித்ததுதான் தஞ்சையென இன்று அழைக்கப்படும் தஞ்சாவூர் என அறியலாகிறது. தமிழ் இலக்கியம் முத்தொள்ளாயிரம் சோழ நாட்டின் தஞ்சைப் பகுதியை அரச குடும்பமாகக் கருதப்படும் புகழ் பெற்ற முத்தரையர்கள் ஆண்டு வந்துள்ளனர் என்ற செய்தியை தெரிவிப்பதுடன் அவர்களது பெருமைகளையும் கூறுவதாக உள்ளது.அவர்களுள் பெரிதும் போற்றப்பட்டோர் குவவன் மாறன் என்ற பெரும்பிடுகு முத்தரையர் அவரது மகன் மாறன் பரமேஸ்வரன் என்கிற இளங்கோவதியரையன் அவருக்குப் பின் சுவரன் மாறன் என்கிற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆகியோர் ஆவர். முத்தரையர்கள் கிபி 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பதை கீழ் காணும் ஆவணத்தின் செய்தி குறிப்பு) வாயிலாக அறிகிறோம். Anthropological SurveyofIndia. Bulletin, Volume 3, Issue 2. India. Dept. ofAnthropology.p.8.


கலகலப்பாகும் காலாபிடாரியின் திருக்கோவில் பணிகள்:


 


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியின் அருகிலுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தலைநகர் நேமத்தில் அவர் போற்றி வணங்கிய அருள்மிகு காலாபிடாரி அம்மன் திருக்கோவில் திருப்பணிகளின் தொடக்கமாக அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளையின் அலுவலகம் மற்றும் அருள்மிகு காலாபிடாரி அம்மன் திருக்கோவிலின் மடப்பள்ளி ஆகியவை 24.06.2020 புதன் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டன. கணபதி ஹோமம், முத்தரையர் குல இசைச்சக்ரவர்த்தி வளப்பக்குடி வீரசங்கர் அவர்களின் இன்னிசை, கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் எனப்பல நிகழ்வுகள் கொண்ட திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரு ஆர்.வி பாலமுருகன், முத்தரையர் வரலாற்றுக் கலைக் கோட்டத் தலைவர் திரு பி. வீரையன், தஞ்சை ஆசிரியர் ஆர். செல்வராசு ஆகியோர் கலந்து கொண்ட விழா ஏற்பாடுகளை அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் முனைவர் மீ. சந்திரசேகரன், திரு கு.மா. சுப்பிரமணியன் திரு லெனின்ராஜ் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர். முத்தரையர் தொன்மை போற்றும் இத்திருக்கோவில் விரைவில் அமைந்து முத்தரையர் பாரம்பரியத்தை நிலை நாட்ட மன்னரின் புகழ் போற்ற வாழ்த்தி மகிழ்கிறது மக்கள் மறுமலர்ச்சி மன்றம்.