அருள் தருவாய் தாயே! அருள் தருவாயே
அருள் தருவாய் தாயே! அருள் தருவாயே! உன்னருளாளே உலவிடும் எமக்கு அருள் தருவாய் தாயே! அருள் தருவாயே! இனப்பணியாற்றிட , எம் குலம் தழைத்திட, எடுத்திட்ட திட்டங்கள், எண்ணிய எண்ணங்கள் நன்னலம் பெற்றிட, நடத்திட்ட செயல்கள் வின்னமின்றி ஏகிட அருள் தருவாயே தாயே! ஏற்பாய் எம்குரல் இக்கணம் தனிலே நீயே அரணாம்! நீயே ரமாம்! நீயே அனைத்துமாம்! நிலையற்ற உலகினில் நிலைத்தவள் நீயே! தாயே, அருள் தருவாயே. ...... முனைவர் பெ.லோகநாதன்.
கருவூலத்தில் ஒளிரும் மணி
நாட்டு நலனெங்கே? நற்றமிழின் சீரெங்கே? ஊட்டிய தாய்ப்பால் உணர்வெங்கே? கூட்டுப் புழுவாய்க் கிடத்தியோ? பொங்கிப் புயலாய் எழுவாய் தமிழா எழு...
இன்றையத் தமிழனின் நிலையை தெளிவுப்படுத்தி அவனை தூண்டக் கூடிய வகையில் அமைக்கப் பெற்றுள்ள இவ்வெண்பா நாம் நாட்டு நலனை மறந்து நிற்கிறோம் அது பற்றிய விழிப்புணர்வின்றி இருக்கின்றோம். நம் தமிழ் மக்களின் சீர்பெற்ற நாகரீகத்தை மீட்டெடுக்க முயலாதிருக்கின்றோம். நம் உயிராய் விளங்கும் தாய்ப்பாலினூடே ஊட்டிய உணர்விகள் மழுங்கி விட்டன. நாம் கூட்டுப் புழுவாய் அடங்கி முடங்கி கிடக்கிறாயே தமிழா நீ எழுச்சி பெறுவாய். இவற்றைப் பற்றிய உணர்வு கொள்வாய் அவையனைத்தும் நம்மால் உணரப்பட்டு அவற்றை நிறுவிட முயல வேண்டும் என்பதே கவிஞரின் எண்ணப்பாடு ஆகும்.
தமிழும் தமிழரும் எழுவதெப்பொழுது?
நாகரீகத்தின் உச்சம் தொட்டிருந்த நம் தமிழ் சமுதாயத்தின் அடையாளங்கள், சான்றுகள் பலவும் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நாளில் கூட தமிழின் பெருமயயை உணர மறுக்கும் தமிழர்களை என்னவென்று சொல்லுவது. நாகரீகத்தின் உச்சியில் இருந்த நாம் இன்று வடவர் ஆதிக்கத்தில் வலுவிழந்த அடிமைகளாய் வாழ்கின்றோம். எழுவதெப்பொழுது? கீழ்காணும் இரண்டு சான்றுகள் நம்மை வியப்படையவைக்க, பெருமிதம் கொள்ளச்செய்யும்சான்றுகளாகின்றன. படத்தில் காணப்படும் நாணயம் கி.மு 160 ஆம் ஆண்டைச்சேர்ந்ததாகும் அதனில் வசிஷ்டிபுத்ரா சத்கர்னி என்ற அரசர் காலத்தைச்சேர்ந்ததாக கருதப்படுகிறது. அந்த நாணயத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தில் காணப்படும் மார்பளவு சித்திரம் மன்னர் பிரகிருத் என்பவரது படம் என அறியலாகிறது.