உறவின் குரல்!

உறவின் குரல்!


அன்பிற்குரிய உறவுகளே, வணக்கம். பாதுகாப்பாயிருங்கள். முகக்காப்பு, சமூக இடைவெளி, கை கால் கழுவுதல் தவறாது கடைபிடியுங்கள். நலமே வாழ வாழ்த்துக்கள். மன்ற நிகழ்வுகள் அது கடந்து வந்த ஏறத்தாழ 35 ஆண்டுகள் பயணத்தில் இவ்வாண்டு போல் மாதக் கூட்டம் பாதிக்கப்பட்டு உறவுகளைக் காணாது கழிந்ததில்லை. பொது ஊரடங்கு நீக்கப்படுமானால் செப்டம்பர் மாதத்திலாவது நாம் கூடுவோம் வாழ்த்துக் கூறுவோம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். இந்த செப்டம்பர் மாதத்தில் ஆண்டுப் பொதுக் குழு கூட்டம் நடத்த வேண்டுவது சட்டத் தேவையாக உள்ளது. எனவே ஊரடங்கு தளர்த்தப்படின் இம்மாதக் கூட்டம் ஆண்டுப் பொதுக்குழு கூட்டமாக நடைபெறும் இல்லையேல் குறைந்தது வாட்ஸப்லாவது ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கைகள் அனுப்பப்பட்டு விட்டன. அஞ்சலில் கிடைக்கப் பெறாதவர்கள் இதையே உரிய அறிவிக்கையாக கொள்க.


பள்ளியின் ஒப்புதல் புதுப்பித்தலுக்கு அனுப்பப் -பட்டுள்ளது. பள்ளியில் 6 ஆவது வகுப்பு தொடங்குவதற்கான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து தன்னாலியன்றதை செய்வதாக பள்ளியின் கல்வி ஆலோசகர் திரு ஜான்சன் சகாயநாதன் கூறியுள்ளார். மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உடனடித் தேவை வகுப்பறைகள்தான். உறவுகள் மனையடிக் கொடைத் திட்டத்தை உறவுகளிடம் கொண்டு சேர்த்து வகுப்பறைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள உதவுமாறு, ஆதரவுதர அன்புடன் வேண்டுகிறேன். மன்றத்தின் நிதி நிலை எப்பொழுதும் போல் நெருக்கடி நிலையில் தான் உள்ளது. தயவு செய்து உறுப்பினர்கள் தங்களது ஆண்டு சந்தாவை செலுத்தி உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொள்ள வேண்டுகிறோம். உறவுப்பாலத்திற்கும் சந்தா செலுத்தி உறுப்பினர்களை சேர்த்து மன்ற நிதி நிலையை வலுப்படுத்தமாறு வேண்டுகிறோம். நன்றி. -


                                                                              ஆசிரியர்


அருண்வாசம் பள்ளியில் இந்திய தேசத்தின் விடுதலை விழாவும் எம் சிறார்களின் பட்டமளிப்பு விழாவும்




ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய தேசத்தின் விடுதலைத்திருநாள். கொரோனா தொற்றால் குதூகலமின்றி ஆனால் உற்சாகமும் உணர்வும் குறைவின்றி அருண் வாசம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


விடுதலைத் திருநாளோடு சேர்த்து நம் பள்ளியில் 5 ஆம் வகுப்பு முடித்து பிற பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேரும் நமது மூத்த மாணவர்களுக்கு பாராட்டி சான்றுகள் வழங்கி பட்டமளிக்கும் விழாவும் நடத்தப் பெற்றது. கொரோனா காலமென்பதால் அந்நோய் தொற்றிலிருந்து தப்பிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு நடந்த இவ்விழாவிற்கு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு ச.துரைராஜ் அவர்களும், குழுமணி ஊராட்சி மன்றத் தலைவர் திரு கல்யாணராமன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்தனர். பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்கமாக உலகப் பேராசான் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு திரு ச.துரைராஜ் அவர்கள் மாலை அணிவிக்க மாணவர்கள் குறள்களை ஓதி வள்ளுவப் பெருந்தகைக்கு வணக்கம் செலுத்தினர். விடுதலைநாளையொட்டி பள்ளி வளாகத்தில் தேசியக்கொடியினை அந்தநல்லூர் ஒன்றியப் பெருந்தலைவர் திருச.துரைராஜ் அவர்கள் ஏற்றி வைக்க பள்ளிச் சிறார்கள் கொடிவணக்கம் பாடி தேச விடுதலைநாள் விழாவினை சிறப்பித்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கையாழ்வார் கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி முதல்வர் திருமதி ந. சத்தியப்பிரியா வரவேற்புரை நிகழ்த்த பள்ளியின் தாளாளர் முனைவர் பெ. லோகநாதன் தலைமையுரையாற்றினார். மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர், திருச்சி மாவட்ட காங்கிரஸின் மீனவர் அணித் தலைவர் திரு | பெ.தனபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் கல்வி ஆலோசகர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு ஜான்சன் சகாயநாதன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணமாணவியரை வாழ்த்திப் பாராட்டிப் பேசினார். கல்விக்குழு உறுப்பினர் திரு பெ. சின்னத்தம்பி அவர்கள் தேசவிடுதலையின் சிறப்புக் - களைப் பற்றி எடுத்துரைத்தார். குழுமணி ஊராட்சி மன்றத் தலைவர் திருகல்யாணராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் சிறப்புரையாற்றிய திரு. ச. துரைராஜ் அவர்கள் பள்ளி அமைப்பின் சிறப்பு குறித்து வியப்பு தெரிவித்ததுடன் முக்கியத்துவத்தை விளக்கினார். இப்பள்ளி தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்தால் தன்னால் மேலும் பல உதவிகளைச் செய்திருக்க இயலுமென்றும் தற்பொழுது தன்னால் பள்ளி வளர்ச்சிக்கென ரூ.25,000/- மட்டுமே அளிக்க இயலுமென்றும் பின்னர் தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாயும் கூறி உரையை நிறைவு செய்தார். மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழையும் சிறப்புப் பரிசினையும் வழங்கிப் பெருமை சேர்த்தனர். சான்றிதழ் மட்டுமே பெறவிருந்த மாணவர்களுக்கு பள்ளியின் நிருவாக அலுவலர் திரு கோ.சற்குணம் அவர்கள் சிறப்புப் பரிசுகளை வழங்குவதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள (அன்னாருக்கு பள்ளியின் சார்பில் நமது நன்றிகள்) அவர் சார்பில் ரூ. 100 பெறுமானமுள்ள பல்பயன் பெட்டிகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.



பாராட்டுரை வழங்கிய பள்ளியின் கல்வி ஆலோசகர் திரு ஜான்சன் சகாயநாதன் அவர்கள் மாணவர்கள் பள்ளியை விட்டு நீங்குவது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர்கள் இப்பள்ளியிலேயே தங்கள் படிப்பினைத் தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் முடிந்தால் இவ்வாண்டே அவ்வாறு செய்தால் நன்றாக இருக்குமென்றும் கூறினார். பள்ளியின் வளர்ச்சிக்கென ரூ.10 ஆயிரம் அளிப்பதாவும் கூறினார். கொடை வழங்கிய கருணை உள்ளங் -களுக்கு நமது நன்றிகள்)