திருமதி சு.ப்ரீதா, திருமதி. செல்வராணி, திருமதி. ஆ. மஹேஸ்வரி சுப்பிரமணியன், திரு. பிரவீன் பெரியசாமி செல்வி. நிராலினி ஆகியோர் அமரர் முனைவர் பெ.சுப்பிரமணியன் நினைவு கல்விக்கட்டண விருதிற்கான தொகை (ஓராண்டுக்கானது) ரூ.7000 த்தினை வழங்குகின்றனர். உறவின் குரல்! அன்பிற்குரிய உறவுகளே , வணக்கம்! கொரோனாவிலிருந்து மீண்டு விட்டோமா என்பது வினாக்குறியாக இருக்கும் பொழுதே அதன் இரண்டாம் அலை தாக்க ஆரம்பித்து விட்டதாகக்கூறப்படுகிறது. வாழ்நாள் முழுதும் இதே பயத்தில் வாழ வேண்டிவருமோ எனும் பயம் மேலோங்கி நிற்கிறது. எது எப்படி இருப்பினும் நாம் நோய் தடுப்பு முறைகளை கடைபிடித்து கவனமாக ஆரோக்கியமாக நல வாழ்வு வாழ வாழ்த்துகிறோம். நமது மாதப் பொதுக்குழு கூட்டங்களுக்கு வருகை குறைந்துவருகிறது சற்று வருத்தமாக இருக்கிறது. மாதமொருமுறை கூடுவது நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து நலம் விசரிக்கவும் நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டத்தளம்தான் நமது மக்கள் மறுமலர்ச்சி மன்ற மும் , மன்றக் கூட்டமும். எனவே உறவுகளே மாதக்கூட்டத்தில் கலந்து கொள்வதை ஒரு கடமையாகக் கொண்டு வருகை தந்தீர்களானால் நமது செயல்பாடுகள் சிறக்கவும் நமதுபொறுப்பாளர்களுக்கும் உறவுகளுக்கும் உற்சாகத்தினை அளிக்கவும் ஒரு நல்வாய்ப்பு ஏற்படும் என்பதை தயவு செய்து உணருங்கள். கூட்டத்திற்கு வருகை தருவதை ஒரு இனக் கடமையாகக் கொள்ளுங்கள். பெருமளவில் வருகை தாருங்கள். மாதந்தோறும் சந்திப்போம் மகிழ்வினை உறுதி செய்வோம். நன்றி உறவுகளே நன்றி தங்கள் வருகைக்கு.